தொழில்நுட்ப கல்வியில் முத்திரை பதிக்கும் சி.ஐ.இ.டி.,
தொழில்நுட்ப கல்வியில் முத்திரை பதிக்கும் சி.ஐ.இ.டி.,
UPDATED : ஜூன் 19, 2026 08:59 PM
ADDED : ஜூன் 19, 2026 05:41 PM
நரசிபுரத்தில், கோயம்புத்துார் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தொழில்துறையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு நவீன கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இக்கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருவதுடன், யு.ஜி.சி., அங்கீகாரம், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி, அண்ணா பல்கலை இணைப்பு மற்றும் நாக் 'ஏ' தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கருதி, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, மின்னணுவியல், மெக்கானிக்கல், சிவில் உட்பட, 11 இளநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் டி.எஸ்.டி., நிதியுதவியுடன் செயல்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் , ஏ.ஐ.சி.டி.இ., ஐடியா லேப் மற்றும் அதிநவீன ஏ.ஆர்.,/வி.ஆர்., ஆய்வகங்கள் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறை சார்ந்த கற்றல் முறைகள், தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சிகள், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் மற்றும் முன்னணி நிறுவனங்களுடனான இணைப்புகள் வாயிலாக, மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு முழுமையாக தயார்படுத்தப்படுகின்றனர்.
பல மாணவர்கள் முன்னணி தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அறிவு, திறன், புதுமை மற்றும் மனிதநேய மதிப்புகளுடன் கூடிய எதிர்கால தலைவர்களை உருவாக்குவதே கல்லுாரியின் நோக்கமாக உள்ளது.
