/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குடி'மகன்கள் போதையில் ரகளை; அச்சத்தில் பொதுமக்கள்!
/
'குடி'மகன்கள் போதையில் ரகளை; அச்சத்தில் பொதுமக்கள்!
'குடி'மகன்கள் போதையில் ரகளை; அச்சத்தில் பொதுமக்கள்!
'குடி'மகன்கள் போதையில் ரகளை; அச்சத்தில் பொதுமக்கள்!
ADDED : மார் 17, 2025 09:31 PM

பகலிலும் ஒளிருது!
கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் இருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்தில், பகல் நேரத்தில் மின்விளக்கு அடிக்கடி எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- கணேசன், தாமரைக்குளம்.
சாய்ந்த சிக்னல் கம்பம்
பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த சிக்னலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரைவில் சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- மனோகரன், பொள்ளாச்சி.
'குடி'மகன்கள் தொல்லை
பொள்ளாச்சி நகராட்சி, 35வது வார்டு பகுதியில் இரவு நேரத்தில் அதிகப்படியான நபர்கள் மது அருந்தி விட்டு, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, போலீசார் இப்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும்.
-- சுந்தர், பொள்ளாச்சி.
சேதமடைந்த தடுப்பு
வால்பாறையில் இருந்து, சிறுகுன்றா செல்லும் நெடுஞ்சாலை ரோட்டின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு, விபத்தில் சேதமடைந்து காணப்படுகிறது. இது நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருப்பதால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் இதை சரி செய்ய வேண்டும்.
-- கவிதா, வால்பாறை.
நகராட்சி கவனிக்குமா?
பொள்ளாச்சி, உழவர் சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடம் முறையான பராமரிப்பு இன்றி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக நீண்ட நாட்களாக உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து, இந்த இடத்தை சுத்தம் செய்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
சுகாதார சீர்கேடு
உடுமலையிலிருந்து கொழுமம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் அக்கழிவுகளை தொடர்ந்து உட்கொள்கிறது. இதனால் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ரோட்டோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
- ராதிகா, உடுமலை.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
உடுமலை தலைகொண்டம்மன் கோவில் சாலையில், மாரியம்மன் கோயில் தேர் வரும் சாலையில் 22 கி.வோ., உயர் அழுத்த செல்லும் மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த நிலையில் உள்ள கம்பத்திற்கும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்குமார், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திக்கொள்கின்றன. இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் போகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மாலை நேரங்களில் ரோட்டின் பாதி வரை நிற்கும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- தருண்குமார், உடுமலை.
சேதமடைந்த ரோடு
மலையாண்டிகவுண்டனுாரில் அங்கன்வாடிக்கு செல்லும் ரோடு மோசமாக உள்ளது. மழைநாட்களில் மழைநீர் தேங்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்கு பெற்றோர் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைப்பதற்கு ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜன், மலையாண்டிகவுண்டனுார்.
விதிமீறும் வாகனங்கள்
உடுமலை, சீனிவாசா வீதியில் வாகனங்கள் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படுகின்றன. வணிக கடைகளுக்கு வருவோர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கே முடியாமல் திணறுகின்றனர். போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்த வேண்டும்.
- வாசன், உடுமலை.
ரோட்டை சரிசெய்யுங்க
உடுமலை, வக்கீல் நாகராஜன் வீதி நால்ரோட்டில் பாதாள சாக்கடை குழிகளில் பழுதுபார்க்கும் பணிகளுக்கு ரோடு தோண்டப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற பின், மீண்டும் ரோடு சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்குள்ளாகின்றனர்.
- மணிகண்டன், உடுமலை.