/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நடக்கிறது சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு
/
கோவையில் நடக்கிறது சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு
ADDED : நவ 03, 2025 02:30 AM
கோவை: கோவையில், சி.ஐ.டி.யூ. 16வது மாநில மாநாடு, நவஇந்தியா அருகில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கத்தில் வரும், 6 முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்து, மாநாட்டுக்குழு தலைவர் பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில், 42 ஆண்டுகளுக்கு பிறகு, சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடக்கிறது. சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் சுகுமாரன்,கோவை முன்னாள் எம்.பி., நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., வெள்ளிங்கிரி மற்றும் சி.ஐ.டி.யூ. மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்தும், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநில மாநாட்டின் வரலாற்று கண்காட்சி நடைபெற இருக்கிறது. மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
ஐ.டி. நிறுவன தொழிலாளர்கள் பிரச்னை முதல், துாய்மை பணியாளர்கள் பிரச்னை வரை, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மாநாடு வரவேற்பு குழு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாநில துணைச்செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

