/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர், மாவட்ட போலீசார் இடமாற்றம்
/
மாநகர், மாவட்ட போலீசார் இடமாற்றம்
ADDED : செப் 22, 2024 05:23 AM
கோவை : கோவை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சப் டிவிஷன் டி.எஸ்.பி.,யாகவும், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த நமசிவாயம், நீலகிரி மாவட்டம் ஊட்டி டி.எஸ்.பி.,யாகவும், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாகவும், உக்கடம் உதவி கமிஷனர் வீரபாண்டி, நீலகிரி மாவட்டம் குன்னுார் டி.எஸ்.பி.,யாகவும், இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல், மதுரை ரயில்வேஸ் டி.எஸ்.பி.,யாக இருந்த பொன்னுசாமி, கோவை பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.,யாகவும், திருப்பூர், நல்லுார் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த நந்தினி ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனராகவும், விருதுநகர் ஆயுதப்படை டி.எஸ்.பி.,யாக இருந்த பழனிகுமார், கோவை போலீஸ் பயிற்சி பள்ளி துணை முதல்வராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.