தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கால்நடைகளையும் விட்டு வைக்காத கால நிலை மாற்றம்

கால்நடைகளையும் விட்டு வைக்காத கால நிலை மாற்றம்

கால்நடைகளையும் விட்டு வைக்காத கால நிலை மாற்றம்


UPDATED : அக் 04, 2026 05:29 AM

ADDED : அக் 03, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:29 AM ADDED : அக் 03, 2026 04:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளால் வெப்பநிலை அதிகரிப்பது, வறட்சி நீடிப்பது, அதைத் தொடர்ந்து திடீர் கனமழை பெய்வது போன்ற மாற்றங்கள் மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய், பூனைகளுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் அவரின் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அதிக வெப்பநிலை காரணமாக மாடுகளில் 'ஹீட் ஸ்ட்ரெஸ்' ஏற்பட்டு, மூச்சுவிடுதல் அதிகரித்தல், அதிக தண்ணீர் குடித்தல், சோர்வு, தீவனம் உட்கொள்ளுதல் குறைதல் போன்றவை ஏற்படலாம். இதனால் உடல் எடை மற்றும் பால் உற்பத்தி குறைவதுடன், இனப்பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேய்ச்சலை அதிகம் சார்ந்திருக்கும் ஆடு, செம்மறியாடுகளுக்கு வறட்சி காலத்தில் பசுந்தீவனப் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாகிறது. உடல் எடை குறைதல், குட்டிகளின் வளர்ச்சி பாதிப்பு, பால் உற்பத்தி குறைதல் போன்றவை ஏற்படலாம். வறட்சிக்குப் பிறகு மழை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும்போது குடற்புழு உள்ளிட்ட ஒட்டுண்ணித் தொற்றுகளும் அதிகரிக்கலாம்.

கோழிப்பண்ணைகளிலும் வெப்பம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெப்ப அழுத்தத்தால் தீவனம் உட்கொள்ளுதல் குறைந்து, பிராய்லர் கோழிகளின் எடை அதிகரிப்பு பாதிக்கலாம். முட்டையிடும் கோழிகளில் முட்டை உற்பத்தி மற்றும் எடை குறைவதுடன், முட்டை ஓட்டின் தரமும் பாதிக்கப்படலாம். குடிநீர் தேவை அதிகரிப்பதுடன், காற்றோட்டம் குறைந்தால் அமோனியா தேக்கம் காரணமாக சுவாசப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நாய், பூனைகளிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காணப்படலாம். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக உண்ணி, பிளீ போன்ற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகரிக்கலாம். இதனால் பாபிசியோசிஸ், எர்லிக்கியோசிஸ் உள்ளிட்ட ரத்த ஒட்டுண்ணி நோய்கள் ஏற்படக்கூடும். காய்ச்சல், சோர்வு, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.

நீண்ட வறட்சிக்குப் பிறகு திடீரென கனமழை பெய்து நீர்த்தேக்கம் ஏற்படும் போது, மாசடைந்த நீர் மற்றும் ஈரமான சூழல் மூலம் சில வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். வெள்ளநீரில் எலிகளின் சிறுநீர் கலப்பதால் லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படலாம் என்று மருத்துவக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, கால்நடைகளுக்கு போதுமான சுத்தமான குடிநீர், நிழல், காற்றோட்டமான கொட்டகை, தரமான தீவனம் ஆகியவற்றை வழங்க வேண்டும். தடுப்பூசிகளை முறையாக மேற்கொள்வதுடன், கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உண்ணி, பிளீ மற்றும் குடற்புழு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் கொட்டகைகள் ஈரமாகாமல் பராமரிப்பதும் அவசியம்.

வெயிலாக இருந்தாலும்... மழையாக இருந்தாலும்... கால்நடைகளின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதே அவற்றை பாதுகாக்கும் வழியாகும் என்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us