/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி; காலிறுதியில் காஞ்சியை வீழ்த்தியது கோவை
/
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி; காலிறுதியில் காஞ்சியை வீழ்த்தியது கோவை
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி; காலிறுதியில் காஞ்சியை வீழ்த்தியது கோவை
முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி; காலிறுதியில் காஞ்சியை வீழ்த்தியது கோவை
ADDED : அக் 17, 2024 11:39 PM

கோவை: 'முதல்வர் கோப்பை' மாநில அளவிலான கூடைப்பந்து காலிறுதி போட்டியில், கோவை அணியிடம் பரபரப்பான ஆட்டத்தில், 8 புள்ளிகள் வித்தியாசத்தில் காஞ்சிபுரம் அணி தோல்வியை தழுவியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த, 7ம் தேதி முதல் நடந்துவருகிறது.
பள்ளி மாணவர்களை தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் கடந்த, 14ம் தேதி துவங்கியது; இன்று நிறைவடைகிறது. மாநிலத்தை சேர்ந்த, 38 மாவட்ட அணிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன.
ஆண்களுக்கான முதல் காலிறுதியில், செங்கல்பட்டு அணி, 88-72 என்ற புள்ளிக் கணக்கில் நாகப்பட்டினம் அணியையும், இரண்டாம் போட்டியில் கோவை அணி, 88-80 என்ற புள்ளிக் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும், மூன்றாம் போட்டியில் திண்டுக்கல் அணி, 82-71 என்ற புள்ளிக் கணக்கில் திருச்சி அணியையும், நான்காம் போட்டியில் சென்னை அணி, 65-21 என்ற புள்ளிக் கணக்கில் துாத்துக்குடி அணியையும் வென்றன.
பெண்களுக்கான முதல் காலிறுதியில், செங்கல்பட்டு அணி, 89-48 என்ற புள்ளிக்கணக்கில் மதுரை அணியையும், இரண்டாம் போட்டியில் காஞ்சிபுரம் அணி, 76-41 என்ற புள்ளிக் கணக்கில் திண்டுக்கல் அணியையும், மூன்றாம் போட்டியில் கோவை அணி, 94-49 என்ற புள்ளிக்கணக்கில் கடலுார் அணியையும், நான்காம் போட்டியில் சென்னை அணி, 90-21 என்ற புள்ளிக்கணக்கில் நாமக்கல் அணியையும் வீழ்த்தின.
தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் இன்று நடக்கின்றன. மாநில அளவிலான கூடைப்பந்து முதல்வர் கோப்பையை வெல்வதுயார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வீரர், வீராங்கனைகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.