/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் திட்டம்; பேரூரில் வந்த 1,200 மனுக்கள்
/
மக்களுடன் முதல்வர் திட்டம்; பேரூரில் வந்த 1,200 மனுக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம்; பேரூரில் வந்த 1,200 மனுக்கள்
மக்களுடன் முதல்வர் திட்டம்; பேரூரில் வந்த 1,200 மனுக்கள்
ADDED : ஜன 04, 2024 12:42 AM
தொண்டாமுத்தூர்: பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை, 13 இடங்களில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 1200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், கடந்த, டிச., 18ம் தேதி முதல் நேற்று வரை, பேரூர், வடவள்ளி, கல்வீரம்பாளையம், ஆலாந்துறை, குமாரபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூலுவபட்டி, குனியமுத்தூர், தொண்டாமுத்தூர், வீரகேரளம் என, 13 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்துள்ளது.
இந்த முகாமில், வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறை, மின்வாரியம், மகளிர் திட்டம், தாட்கோ என, 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இதில், உடனடியாக தீர்வு காணும் வகையில் உள்ள ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, மின் கணக்கு பெயர் மாற்றம் போன்ற மனுக்கள், மக்களுடன் முதல்வர் என்ற இணையதளத்திலும், கள ஆய்வு செய்து வழங்கப்படும் மனுக்களை, முதல்வர் புகார் இணையதளத்திலும் பதிவு செய்கின்றனர்.
இதுவரை, பேரூர் தாலுகாவில், 1,200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 120 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
மற்ற மனுக்கள், அந்தந்த துறைகளின் கள ஆய்விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஒரு மாதத்திற்குள் அதற்கு தீர்வு காணப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.