/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துாரில் சேவல் சண்டை சூதாட்டம்
/
தொண்டாமுத்துாரில் சேவல் சண்டை சூதாட்டம்
ADDED : அக் 30, 2024 09:26 PM
தொண்டாமுத்தூர், ;பச்சாபாளையத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பச்சாபாளையம், ஆபிஸர் காலனி அருகே உள்ள காலி இடத்தில் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றபோது, சேவல் சண்டை சூதாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த, தீத்திபாளையத்தைச் சேர்ந்த சுஜித் குமார், 35, பேரூரை சேர்ந்த விக்னேஷ்,25 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூதாட்டத்தில் பயன்படுத்திய இரண்டு சேவல்கள் மற்றும் நான்கு பைக்குகளையும் ,பறிமுதல் செய்தனர்.