/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தினம் கொண்டாட்டம்
/
ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தினம் கொண்டாட்டம்
ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தினம் கொண்டாட்டம்
ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 04, 2025 10:57 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, ஆழியாறு தென்னை ஆராயச்சி நிலையம், 'பாராசூட் கல்பவிருக் ஷா' அறக்கட்டளை சார்பில், உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.
வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.தெற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி, தென்னைக்கும், தென்னை சார் ஊடுபயிர்களுக்கும் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், சொட்டு நீர் பாசனத்துக்கான மானியம், மறு நடவுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார்.
'பாராசூட் கல்பவிருக் ஷா' அறக்கட்டளை நிறுவனத்தின் மேலாளர் சாஜிகுமார், தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் மேலாண்மை குழு உறுப்பினர் சோமசுந்தரம், கோவை மாவட்ட வேளாண் குழு உற்பத்தி உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
கோவை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பழப்பயிர்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் அஸ்விலியா, தென்னைக்கேற்ப கலப்பு பயிர்களான மங்குஸ்தான், ரம்பூட்டான், வெண்ணெய் பழம், சாத்துக்குடி, பலா, இலவங்கப்பட்டை, குறுமிளகு ஆகியவை குறித்து விளக்கினார்.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய பேராசிரியர் கீதா, தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும், முன்னோடி விவசாயி காளிபிரகாஷ், தென்னந்தோப்பில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு அரிதான பழப்பயிர்கள் குறித்து விளக்கி பேசினர்.
தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, உலக தென்னை தினம் கொண்டாடுவது குறித்து விளக்கினார்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மற்றும் பழ ரகங்கள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் உள்ளடக்கிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.