ADDED : ஜூன் 22, 2026 10:08 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பி ல், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் சண்முகம், பொருளாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு, 60 ரூபாய், உரிக்காத தேங்காய் கிலோ ஒன்றுக்கு, 30 ரூபாய்; கொப்பரைக்கு கிலோ, 180 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வெள்ளை ஈ தாக்குதல், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த உரிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
