UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:34 PM
அன்னூர்: அன்னூரில் நடந்த ஏலத்தில், 13 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது.
அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளை பொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது. இதில் 17 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ குறைந்தது, 42 ரூபாய் 50 பைசா முதல், அதிகபட்சம் 51 ரூபாய் வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை 180 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ குறைந்தது 97 ரூபாய் 90 பைசா முதல், அதிகபட்சமாக 148 ரூபாய் 89 பைசா வரை விற்பனையானது.
தேங்காய் தொட்டி 325 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ 29 ரூபாய் 29 பைசா என விற்பனையானது. 'மொத்தம் 13 லட்சத்து 37 ஆயிரத்து 721 ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது. 183 விவசாயிகள் பங்கேற்றனர்,' என கோயம்புத்தூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.
தேங்காய் விற்பனை விலை கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
