/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் நடந்த ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு
/
அன்னுாரில் நடந்த ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு
ADDED : அக் 08, 2025 11:42 PM
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது.
இதில் 10 ஆயிரத்து 76 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்ததன. ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சம் 60 ரூபாய் பத்து பைசா முதல், அதிகபட்சம் 72 ரூபாய் 40 பைசா வரை விற்பனையானது.
தண்ணீர் வற்றிய தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு 96 ரூபாய் 99 பைசாவுக்கு விற்பனையானது. தேங்காய் கொப்பரை குறைந்தபட்சம் ஒரு கிலோ 145 ரூபாய் முதல் அதிகபட்சம் 233 ரூபாய் வரை விற்பனையானது.
'தேங்காய் தொட்டி ஒரு கிலோ 28 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 466 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது.
64 விவசாயிகள் பங்கேற்றனர்' என, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன், விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.