ADDED : செப் 24, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்தது.
தேங்காய் ஒரு கிலோ 46 முதல் 54 ரூபாய் வரையும், தேங்காய் கொப்பரை, ஒரு கிலோ 110 முதல் 155 ரூபாய் வரையும், தேங்காய் தொட்டி, ஒரு கிலோ 34 ரூபாய் என, 18 லட்சத்து 90 ஆயிரத்து 581 ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையானது; 187 விவசாயிகள் பயனடைந்தனர் என, கோயம்புத்துார் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட தேங்காய் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
