ADDED : ஆக 20, 2026 03:20 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆழியாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், விற்பனைக்காக தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆழியாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான தரமான தென்னங்கன்றுகளை பண்ணைக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ள, ஆனைமலை தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெட்டை தென்னங்கன்று 80 ரூபாய்க்கும், நெட்டை குட்டை தென்னங்கன்று 120 ரூபாய் விலையில் உள்ளது. ஆழியாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் கிடைக்கும் தென்னங்கன்றுகளை விவசாயிகள் பயன்படுத்தி புதிய தென்னந்தோப்புகள் அமைத்தும், பழைய தோப்புகளில் இடைவெளி நிரப்பியும் பயன்பெறலாம்.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை, ஆனைமலை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனா தேவி தெரிவித்தார்.
