/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் வேர்வாடல் பாதிப்பு; நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
/
தென்னையில் வேர்வாடல் பாதிப்பு; நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
தென்னையில் வேர்வாடல் பாதிப்பு; நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
தென்னையில் வேர்வாடல் பாதிப்பு; நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 22, 2025 10:00 PM
ஆனைமலை; ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தென்னையில் வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நிவாரணம் முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில், விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. எனவே, நடப்பாண்டு விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
இந்நிலையில், நிவாரணத்துக்கு விண்ணப்பிக்க தோட்டக்கலைத்துறைஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
ஆனைமலை பகுதியில், வேர் வாடல் நோய் தீவிரமாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்ட, தமிழக அரசு ஒரு ெஹக்டேருக்கு, 32 மரங்களுக்கு, தலா, ஆயிரம் ரூபாய் என, 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும், தென்னை மரக்கன்றுகளும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. நோய் தாக்கப்படாத மரங்களை காப்பாற்ற ஊட்டச்சத்துக்கள், நுண்ணுயிர் உரங்கள் வழங்க உள்ளது.விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன்கார்டு நகல், ஆதார் நகல், வங்கி புத்தக நகல், இரண்டு போட்டோக்களுடன் அணுகலாம்.
தென்னை வேர் வாடல் நோய் நிவாரணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்து போதிய அறிவுரைகளும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினார்.