ADDED : ஆக 29, 2026 12:52 PM
அ நிறம் | அளவு
கோவை: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க. மறுசீரமைப்பு செய்யட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியாக தி.மு.கவில் புதிதாக 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை தி.மு.கவில் 3 மாவட்டங்கள் இருந்தன. தற்போது அது 5 மாவட்டமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகள் கோவை தெற்கு மாவட்டமாகவும், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகள் கோவை மேற்கு மாவட்டமாகவும், சூலூர், சிங்காநல்லூர் தொகுதிகள் கோவை கிழக்கு மாவட்டமாகவும், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகள் கோவை மத்திய மாவட்டமாகவும், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகள் கோவை வடக்கு தொகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
