/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசு வழிகாட்டுதலில் சோலார் கருவிகளை நிறுவும் கோவை 'ஜோலாடெக்' நிறுவனம்
/
மத்திய அரசு வழிகாட்டுதலில் சோலார் கருவிகளை நிறுவும் கோவை 'ஜோலாடெக்' நிறுவனம்
மத்திய அரசு வழிகாட்டுதலில் சோலார் கருவிகளை நிறுவும் கோவை 'ஜோலாடெக்' நிறுவனம்
மத்திய அரசு வழிகாட்டுதலில் சோலார் கருவிகளை நிறுவும் கோவை 'ஜோலாடெக்' நிறுவனம்
ADDED : செப் 30, 2025 10:49 PM

வீ டு மற்றும் தொழிலுக்கு சூரிய சக்தி ஒரு சிறந்த முதலீடாகும்.வீடுகளுக்கான மின்சார நுகர்வோருக்கு ஜோலாடெக் பவர் சிஸ்டம் நம்பகமான நிறுவனங்களின் ஒன்று.
மகேந்திரா பம்ப்ஸ் இயக்குனர் மிதுன் ராம்தாஸ் கூறியதாவது:
சோலார் ரூபிங் டாப் சோலார் மின் அமைப்பு சூரிய ஆற்றலுக்கான முதலீடு மட்டுமல்ல, நிதி ரீதியாகவும் சிறந்த தீர்வாகும். முதலீட்டுத் தொகை திரும்ப பெறும் காலம் வெறும் 2--3 ஆண்டுகளில் வீடுகளுக்கும் மற்றும் 4--7 ஆண்டுகளில் தொழிற்சாலைகளுக்கும் திரும்ப கிடைக்கும். இந்த அமைப்புகள், பல தலைமுறைகளுக்கு பயன்படும் இலவச மின்சாரத்தை வழங்குகின்றன. தொழில்களுக்கு குறிப்பாக ரூப்டாப் அல்லது நிலத்தில் பொருத்தும் பெரிய சோலார் அமைப்புகள், கம்பி மின் கட்டணத்தைவிட மலிவான மின்சாரத்தை வழங்குகின்றன. இதனால் மின்சார செலவு குறையும். சுற்றுச்சூழல் நன்மையும் கிடைக்கும்.
அரசு சலுகைகள் எம்.எஸ்.எம்.இ., களுக்கான கட்டணக்குறைப்புகள் தெளிவான விதிமுறைகள் ஆகியவற்றுடன் இப்போது தான் சூரிய சக்திக்கு உகந்த நேரமாகும். உதாரணமாக 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் சோலார் சக்தியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உதாரணமாக ஒரு குடும்பம் 3 கிலோவாட் ரூப் டாப் சோலார் (2-3 பி.எச்.கே.,வீடுகளுக்கு) பயன்படுத்தினால், அரசு சலுகை இல்லாமல் செலவு ரூ.1,90,000---ரூ.2,10,000 ஆகும். அரசு சலுகை எம்.என்.ஆர்.இ., திட்டம் ரூ.78,000. அரசு சலுகைக்குப் பிறகு நிகரச் செலவு ரூ. 1,12,000--ரூ. 1,32,000. இதன்படி, மாதாந்திர மிச்சம் ரூ.4,000 முதல் ரூ.5000. ( பயன்பாட்டின் அடிப்படையில்). முதலீடு திரும்பும் காலம், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். (ரூப் திசை, பேனல் தரம், பயன்பாடு நெட் மீட்டரிங் அடிப்படையில்)
உங்கள் மின் கட்டணத்தை முழுமையாக குறைக்கலாம். உடனடியாக நிறுவலாம். மானியம் பெறுவதில் ஆக்கப்பூர்வமான உதவி, 5 வருட கால பராமரிப்பு, அதிகபட்ச மின் உற்பத்தி, தினசரி மின் உற்பத்தியை கைபேசி மூலம் காண்காணிக்கும் வசதி, அதிகபட்ச மின் உற்பத்தி, அனுபவமிக்க பொறியாளர்கள், குறித்த நேரத்தில் நிறைவான சேவை, பிரதம மந்திரி வீடுகளுக்கான சோலார் திட்டத்தின் மூலமாக மானியம் கிடைக்கும்.
ஜோலாடெக் நிறுவனம் தமிழ்நாடு ஆற்றல் மேலாண்மை அமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், எம்.என்.ஆர்.இ., என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சோலார் அமைப்புகளை வழங்குதல், நிறுவுதல், பராமரித்தல் போன்ற சேவைகள் வழங்குவதில் கடந்த 2024, ஏப்.,17 முதல் 24 முதல் வரும் 2027 ஏப்.,16 வரை அங்கீகாரம் பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.