/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்யணும்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்யணும்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்யணும்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதி செய்யணும்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
UPDATED : ஜூன் 22, 2025 05:40 AM
ADDED : ஜூன் 22, 2025 02:17 AM

கோவை:கோவை மாவட்டத்தில், முதல்கட்டமாக, 82கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, 46 ஆயிரம் மாணவ, மாணவியரை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நேற்று துவங்கியது.
கல்லுாரி வளாகங்களில் சிறப்பு முகாம் நடத்தி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இம்முகாம் நேற்று நடந்தது.
புதிய வாக்காளர்களுக்கான பதிவை துவக்கி வைத்து, கலெக்டர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ - மாணவிகளின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக கல்லுாரிகள் உள்ள மாவட்டம் கோவை.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு படிக்கின்றனர். எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரவர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
கோவை மாவட்டத்தில், 183 கல்லுாரிகளில் இம்முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, 82 கல்லுாரிகளில் இருந்து, 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
இக்கல்லுாரிகளை சேர்ந்த, 2,000 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உள்ளனர். voters helpline app என்ற செயலி வழியாகவும், தேர்தல் ஆணைய இணைய தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் மாணவர்கள் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிதாசன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் சிவக்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.