/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சிக்கு மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
/
கோவை மாநகராட்சிக்கு மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
கோவை மாநகராட்சிக்கு மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
கோவை மாநகராட்சிக்கு மாற்றுத்திறனாளி கவுன்சிலர் நியமனம்
ADDED : நவ 28, 2025 05:24 AM

கோவை: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன கவுன்சிலராக தேர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அப்பதவிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மொத்தம் 88 பேர் விண்ணப்பித்தனர். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர்களில், 46வது வார்டு ரத்தினபுரி முத்துக்குட்டி வீதியை சேர்ந்த குமார ராஜபாண்டியன் என்பவரை நியமித்து, துறையின் முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு நேற்று வந்த அவரிடம், நியமன கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார். பின், உறுதிமொழி ஏற்று, பதிவேட்டில் கையெழுத்திட்டார். இவர், 42 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருக்கிறார். சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளராகவும், தொழிற்சங்க பேரவையிலும் பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன் வார்டு செயலாளர், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப் புகளில் இருந்தவர்.
இவர், மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று (28ம் தேதி) நடக்கும் மாமன்ற கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி முன்னிலையில் பதவியேற்கிறார். ஒரு கால் இழந்திருப்பதால், சக்கர நாற்காலியில் இருந்தபடி, மாமன்ற நடவடிக்கையில் பங்கேற்பார். அவருக்கு எந்த இடம் ஒதுக்கிக் கொடுப்பது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

