UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
சாடிவயல்: போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. திங்கட்கிழமை மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக, மூடப்படும். மற்ற அனைத்து நாட்களும் செயல்படும். ஆனால் இன்று சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என, வனத்துறை அறிவித்துள்ளது.
போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணன் கூறுகையில், ‘‘திங்கட்கிழமைக்கு பதிலாக 21ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக அருவி மூடப்படும். சாடிவயல் யானைகள் முகாமில் அனைத்து நாட்களும், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்,’’ என்றார்.
