/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு வண்டிகளில் பழநி வந்த கோவை பக்தர்கள்
/
மாட்டு வண்டிகளில் பழநி வந்த கோவை பக்தர்கள்
ADDED : ஜன 29, 2025 01:27 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் பிப்.,11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்தனர். இவர்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வருகின்றனர். இந்தாண்டு 20 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். மாட்டுவண்டிகளுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார்களிலும் பக்தர்கள் வந்தனர். காவடிகள் எடுத்து, அலகு குத்தி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இவர்கள் கூறியதாவது: 2024ல் கிரிவீதியில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இருந்தது. இந்தாண்டு அனுமதி இல்லாததால் தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.400 வீதம் தனியார் கட்டணம் வசூலித்தனர். இதை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.