/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை டைஸ் விளையாட்டு கல்லுாரிகள் கலக்கல்
/
கோவை டைஸ் விளையாட்டு கல்லுாரிகள் கலக்கல்
ADDED : மார் 06, 2024 09:04 PM

கோவை : இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையே நடக்கும், 'கோவை டைஸ்' விளையாட்டு போட்டியில் மாணவர்கள் அபாரமாக விளையாடி, வெற்றி பெற்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு 'கோவை டைஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன.
இதன் மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி அணி முதலிடம், கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி மூன்றாமிடம் பிடித்தன.
பூப்பந்து போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி முதலிடம், கே.பி.ஆர்., அணி இரண்டாமிடம், கற்பகம் இன்ஜி., கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன. செஸ் போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி முதலிடம், ஈஸ்வர் கல்லுாரி இரண்டாமிடம், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன. டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.சி.டி., முதலிடம், ராமகிருஷ்ணா இன்ஜி., இரண்டாமிடம், ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன.
கபடியில் இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி முதலிடம், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி இரண்டாமிடம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன.
வாலிபால் போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி முதலிடம், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன. இறகுப்பந்து போட்டியில், கே.பி.ஆர்., முதலிடம், சி.ஐ.டி,. இரண்டாமிடம், கே.சி.டி., மூன்றாமிடம் பிடித்தன.

