/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வுமன்ஸ் சென்டரில் உயர் மகப்பேறு சிகிச்சை
/
வுமன்ஸ் சென்டரில் உயர் மகப்பேறு சிகிச்சை
ADDED : ஆக 09, 2011 02:53 AM
கோவை : கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் 'வுமன்ஸ் சென்டர் அண்ட் ஆஸ்பிட்டல்' துவக்கப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.சென்னை 'மெடிஸ்கேன் சிஸ்டம்', கோவை 'உமன்ஸ் சென்டர்' இணைந்து நவீன சிகிச்சைகளை அளிக்கின்றன. கருக்குழந்தைகள் மருத்துவ பிரிவில் நவீன, உயர் ரக சிகிச்சைகளை மருத்துவ வல்லுனர்கள் அளிக் கின்றனர். சென்னை 'மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ்' உடன் இணைந்து, நவீன தொழில்நுட்ப பரிசோதனை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
சிக்கலான பிரசவ நிலையில் உள்ள கர்ப்பிணிகள், சிக்கலாக பிறந்த குழந்தைகளின் நலன் காக்க 'ஆம்புலன்ஸ்' இயக்கப்படுகிறது. இதில்'இன்குபேட்டர்' முதலான உயிர்காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களும் உள்ளன.பிரசவ காலத்தில் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களின் இறப்பின் சதவீதத்தை குறைத்து, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தில் 'வுமன்ஸ் சென்டர்' செயல்பட்டு வருகிறது.

