/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லுலு பியூட்டி பெஸ்ட் பட்டம் வென்ற கோவை முகங்கள்
/
லுலு பியூட்டி பெஸ்ட் பட்டம் வென்ற கோவை முகங்கள்
ADDED : டிச 04, 2025 08:13 AM

கோவை: லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நடந்த லுலு பியூட்டி பெஸ்ட் அழகிப் போட்டியில், 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மாடலிங் மீது ஆர்வமுள்ளவர்கள், ஒப்பனை கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த தளமாக இருந்தது.
பல சுற்றுகளாக நடத்தப்பட்ட கடுமையான போட்டிக்குப் பிறகு, கோவை முகமாக ஆண்கள் பிரிவில் முகமது சுஹைல் அஸ்லம், பெண்கள் பிரிவில் ஹீரா தேர்வு வெற்றி பெற்றனர்.
முதல் இரண்டு இடங்களை ரகுன், மதுரா சாஹிதி மற்றும் இரண்டாவது இடத்தை சுஜல் பரத், ஸ்வாதி பெற்றனர். வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் வரும் 7ம் தேதி, திருவனந்தபுரத்தில் நடக்கும் லுலு பியூட்டி பெஸ்ட் கிராண்ட் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, லுலு பியூட்டி குயின் மற்றும் லுலு மேன் ஆப் தி இயர் முடிசூட்டப்படும். இதையொட்டி, வரும் 7ம் தேதி வரை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில்அழகு சாதனப் பொருட்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என, லுலு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

