/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று அமர்க்களமாக துவங்குது கோயம்புத்துார் விழா! வரும் 24ம் தேதி வரை காணும் இடமெல்லாம் உற்சாகம்
/
இன்று அமர்க்களமாக துவங்குது கோயம்புத்துார் விழா! வரும் 24ம் தேதி வரை காணும் இடமெல்லாம் உற்சாகம்
இன்று அமர்க்களமாக துவங்குது கோயம்புத்துார் விழா! வரும் 24ம் தேதி வரை காணும் இடமெல்லாம் உற்சாகம்
இன்று அமர்க்களமாக துவங்குது கோயம்புத்துார் விழா! வரும் 24ம் தேதி வரை காணும் இடமெல்லாம் உற்சாகம்
ADDED : நவ 14, 2025 12:02 AM
கோவை: நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர நகரத் திருவிழாவாக அமர்க்களப்படுத்துகிறது கோயம்புத்துார் விழா. இசை, நடனம், இலக்கியம், கலை, உணவு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன், கோவையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இன்று முதல் 24 வரை 18வது 'இன்பினிட்டி எடிஷன்' விழா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, கோயமுத்துார் விழாவின் தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறியதாவது:
14ம் தேதி (இன்று) காலை 8:00 மணியளவில், ரேஸ்கோர்ஸ் சி.எஸ்.ஐ., ஆல்சோல் தேவாலயம் முன் துவங்கி பிஷப் அப்பாசாமி கல்லுாரி வரை, சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் பாதுகாப்பு குறித்து அறியும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பு குழந்தைகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.
நடப்பாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் ஸ்கை டான்ஸ்'. இது ஒரு ப்ராஜெக்ட் மேப்பிங் அனுபவத்தை தரும். ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதில், கோவையின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த காட்சிகள், வரும் 24ம் தேதி வரை மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பார்வைக்கு விருந்து வைக்கும்.
14ம் தேதி முதல் 16ம் தேதி வரை, கொடிசியா வளாகத்தில், 'சயின்ஸ் அண்ட் டெக் பெஸ்ட்' நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த தொழில், மருத்துவம் உட்பட துறையினரின் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டு, அதன் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 35 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியர் தங்களின் படைப்புகளை வெளிக்கொணரும் வகையில், 80 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் 15ம் தேதி முதல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இசை விழா நடத்தப்பட உள்ளது. 15ம் தேதி நடக்கும் முதல் நாள் விழாவில், பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்கிறார்.
ஒவ்வொரு பகுதிகளில் நடக்கும் விழாவில், மாவட்டத்தின் சிறந்த இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 16ம் தேதி மாலை 5:30க்கு, எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில், கோவை நகைச்சுவை சங்கத்தின் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் உட்பட குழுவினர் பங்கேற்கின்றனர்.
வரும் 19ம் தேதி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 20ம் தேதி ஸ்டார்ட் அப்' பங்கேற்பாளர்களுக்கான நிகழ்ச்சி, பீளமேடு பி.எஸ்.ஜி., ஐ.எம்., அரங்கில் நடக்கிறது. ஸ்டார்ட் அப்புக்கு தேவையான சிறந்த யோசனைகள் இருப்பின், அதற்கு முதலீடு பெறவும் நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வரும் 22, 23ம் தேதிகளில், கோவை அரசு கலைக்கல்லுாரியில் 'ஆர்ட் ஸ்ட்ரீட்' நடத்தப்படுகிறது. கோயம்புத்துாரின் உற்சாகத்தைக் கொண்டாடுவதே, இந்த விழாவின் நோக்கம். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். வரும் 23ம் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் இருந்து துவங்கும் மாரத்தானுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

