/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பூ மார்க்கெட்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை
/
கோவை பூ மார்க்கெட்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை
கோவை பூ மார்க்கெட்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை
கோவை பூ மார்க்கெட்டில் மீண்டும் ஆக்கிரமிப்பு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை
ADDED : ஜன 01, 2026 05:13 AM

கோவை: ஆக்கிரமிப்பு அகற்றிய இரு வாரங்களில், கோவை பூ மார்க்கெட் சுற்றுப்பகுதியில் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் போடப்படுகின்றன.
கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டின் இரு புறமும் பூ மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. பொதுமக்கள், சிறு வியாபாரிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு இருந்ததால், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக் கூட இடமில்லாத சூழல் இருந்தது.
ரோட்டிலும் கூட வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நமது நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 12ம் தேதி மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கள ஆய்வு செய்து, போலீஸ் உதவியுடன், ஆக்கிரமிப்பை கடைகளை அகற்றினர். 27 அடி ரோடு மீட்கப்பட்டது. போக்குவரத்து இடையூறின்றி வாகனங்கள் சென்று வந்தன.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இரு வாரங்களே ஆகின்றன. அதிகாரிகளின் கண்காணிப்பு, திசை திரும்பியதால், ரோட்டை மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் போட ஆரம்பித்து விட்டனர். ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகும், மீண்டும் மீண்டும் கடை போடுவதால், வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். தரையில் போடப்படும் மரத்திலான சிலாப்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்கள், ரோட்டில் கடை போட்டிருந்தால், கடை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலங்களில் ஆக்கிரமிப்பு உருவாவதை தடுக்க முடியும். ஆனால், ஆக்கிரமிப்பு உருவாவது நன்கு தெரிந்திருந்தும் நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரனிடம் கேட்ட போது, ''பூ மார்க்கெட்டை மீண்டும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்,'' என்றார்.

