/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில தடகள போட்டியில் ஒட்டுமொத்த 'சாம்பியன்' வென்ற கோவை வீராங்கனைகள்

ADDED : நவ 12, 2024 05:51 AM

கோவை; ஈரோட்டில் நடந்த மாநில தடகள போட்டியில் கோவை வீராங்கனைகள் ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
ஈரோடு, வ.உ.சி., மைதானத்தில், 65வது மாநில தடகள போட்டிகள் நடந்தது. இதில், 100மீ., 200மீ., 400மீ., தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர் இடம் பெற்றனர்.
இதில், கோவை மாணவி நிவேதா, 400மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றுள்ளார். மாணவி சைனி குண்டு எறிதல் போட்டியில் வெள்ளியும், தியா, 200மீ., ஓட்டத்தில் தங்கமும், பிருந்தா, 100மீ., தடை ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கமும், வட்டு எறிதலில் சைனி நிதிலா தங்கமும் வென்றுள்ளனர்.
அதேபோல், மாணவி ஸ்ரீ ஹனிசா மும்முனை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். போட்டிகளின் நிறைவில் ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கோவை மாவட்ட வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த், உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.