/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த குழாய் அடைப்பு சிகிச்சையில் கோவை அரசு டாக்டர்கள் சாதனை
/
ரத்த குழாய் அடைப்பு சிகிச்சையில் கோவை அரசு டாக்டர்கள் சாதனை
ரத்த குழாய் அடைப்பு சிகிச்சையில் கோவை அரசு டாக்டர்கள் சாதனை
ரத்த குழாய் அடைப்பு சிகிச்சையில் கோவை அரசு டாக்டர்கள் சாதனை
ADDED : ஜூலை 22, 2025 11:35 PM
கோவை; கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இரு இளம்பெண்களுக்கு இதய ரத்த குழாய் அடைப்புகள், மருந்து பூசப்பட்ட பலுான்களை கொண்டு ஆஞ்சியோபிளாஸ்டி டி.சி.பி., வாயிலாக அகற்றப்பட்டுள்ளன.
நாமக்கல்லை சேர்ந்த 39 வயது பெண், கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த 27 வயது பெண் ஆகிய இருவர், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, இதய உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, நீரிழிவு நோய் பாதிப்பால் இதய ரத்த குழாய்களில் கடுமையான அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற சூழலில், ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை, ஸ்டென்ட் பொருத்தி வழக்கமான முறையில் கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது கடினமாக இருந்தது. பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்ய இயலாது என்பதால், மருந்து பூசப்பட்ட பலுான்களை கொண்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
மருந்து பூசப்பட்ட பலுானின் மேல் பக்கத்தில், எதிர்ப்பு மருந்து பூசப்படுவதால், சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் அடைப்பையும் தடுக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
டீன் நிர்மலா கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில், 95 சதவீதம் ஆஞ்சியோபிளாஸ்டி நடைமுறைகளில் அடைப்பு ஏற்பட்ட ரத்த குழாய்களை, நிரந்தரமாக பெரிதாக்க மருந்து எலுட்டிங் எனும் ஸ்டென்ட்களே பயன்படுத்தபடுகின்றன.
மருந்து பூசப்பட்ட பலுானை பயன்படுத்துவதன் வாயிலாக, ரத்த நாளங்களில் ஏற்படும் சிறு செயற்கை பாதிப்புகளை தடுக்க முடியும். ஸ்டென்ட் பயன்பாட்டை குறைத்து, ரத்த நாளங்களின் இயல்பான செயல்பாடு பாதுகாக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகளின் இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சுருக்கமடைகின்றன. இத்தகைய சுருக்கமடைந்த சிறிய அளவிலான ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய, டி.சி.பி., முறை பொருத்தமானது.
இந்த சிகிச்சை, இலவசமாக செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால், 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.