/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணை நீர் மட்டம் 158 அடி
/
சோலையாறு அணை நீர் மட்டம் 158 அடி
ADDED : ஆக 03, 2011 11:06 PM
வால்பாறை : தென்மேற்குப்பருவ மழை எதிரொலியாக சோலையாறு அணை நீர்மட்டம் 158 அடியாக உயர்ந்தது.
மழை காரணமாக, மேல்நீராறு (சின்னக்கல்லார்), அக்காமலை, நடுமலை ஆறு, கெஜமுடி டனல், வெள்ளமலை டனல், சிறுகுன்றா கூழாங்கல்ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதி களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 158.02 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 1544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 1035 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்ப இரண்டு அடி நீர்மட்டமே உள்ள நிலையில், எந்த நேரத்திலும் அணை நிரம்பும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறையில் நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழை அளவு (விபரம்: மில்லி மீட்டரில்) வால்பாறை- 25, சோலையாறு- 21, மேல்நீராறு-67, கீழ்நீராறு- 28.

