/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் ரயில்கள் இயக்கணும் கோவை நெக்ஸ்ட் வலியுறுத்தல்
/
கூடுதல் ரயில்கள் இயக்கணும் கோவை நெக்ஸ்ட் வலியுறுத்தல்
கூடுதல் ரயில்கள் இயக்கணும் கோவை நெக்ஸ்ட் வலியுறுத்தல்
கூடுதல் ரயில்கள் இயக்கணும் கோவை நெக்ஸ்ட் வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2026 05:24 AM
கோவை: கோவைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என, தென்னக ரயில்வே மேலாளரிடம், கோவை நெக்ஸ்ட் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தென்னக ரயில்வே பொதுமேளாலர் ஆர்.என்.சிங், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம், கோவை நெக்ஸ்ட் அமைப்பு சார்பில், வட கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பார்ம்கள், கோவையில் 15 ரயில் சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நீட்டிப்பு: ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், டில்லி- கொங்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வாராந்திரம், வாரமிருமுறை இயக்கப்படுகின்றன. இவற்றை வாரத்துக்கு மூன்று முறை இயக்க வேண்டும்.
பாலக்காடு எர்ணாகுளம் ரயில், பாலருவி எக்ஸ்பிரஸ், ஈரோடு- திருச்சி ரயில் சேவைகளை நீட்டித்து, கோவையில் இருந்து இயக்க வேண்டும். ரயில் எண் 66608, 66622 ஆகியவற்றை இணைத்து ஒரே ரயிலாக இயக்க வேண்டும்.
நிறுத்தப்பட்டவை: பழநி வழியாக திண்டுக்கல் - கோவை, செங்கோட்டை ரயில்களும், ஈரோடு வழியாக கோவை- சேலம் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் இயக்க வேண்டும்.
புதிய ரயில்கள்: கோவை- பரூனி, கோவை - திருவனந்தபுரம் வந்தே பாரத், மேட்டுப்பாளையம் - திருச்செந்தூர், மதுரை வழியாக கோவை - கன்னியாகுமரி ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் புதிதாக தொடங்கப்பட வேண்டும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1.8 கோடி மக்கள் இதனால் பயனடைவர்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

