/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடியில் இனி கோவை வீரர்கள் 'ஸ்டார்'தான்! ஸ்டேடியத்தில் வருகிறது புதிய பயிற்சி மையம்
/
கபடியில் இனி கோவை வீரர்கள் 'ஸ்டார்'தான்! ஸ்டேடியத்தில் வருகிறது புதிய பயிற்சி மையம்
கபடியில் இனி கோவை வீரர்கள் 'ஸ்டார்'தான்! ஸ்டேடியத்தில் வருகிறது புதிய பயிற்சி மையம்
கபடியில் இனி கோவை வீரர்கள் 'ஸ்டார்'தான்! ஸ்டேடியத்தில் வருகிறது புதிய பயிற்சி மையம்
ADDED : ஏப் 14, 2025 11:05 PM
கோவை; கபடி போட்டிக்கு பெயர் பெற்ற கோவையில் வீரர், வீராங்கனைளுக்கு முறையாக பயிற்சி வழங்கும் தனி மையம் அமையவுள்ளது தேசிய வீரர்களை அதிகளவில் உருவாக்கும் தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
சென்னைக்கு அடுத்து கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்டவற்றில் கோவை வளர்ந்த நகராக உள்ளது.
இத்துடன் விளையாட்டிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை கோவை வீரர்கள் நிரூபித்துவருகின்றனர். தடகளம், கபடி, கூடைப்பந்து, கோ-கோ போட்டிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
கிராமங்களில் வலம்
நீச்சல், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பதக்கங்களை குவிக்கும் திறமை நம் வீரர்களுக்கு உள்ளது. கபடி விளையாட்டை பொறுத்தவரை மாவட்டத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட அணிகள் நகரம், கிராமங்களில் வலம்வருகின்றன.
அத்துடன், மாணவ, மாணவியரையும் தேர்வு செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும்(எஸ்.டி.ஏ.டி.,) பயிற்சி வழங்கி வருகிறது. இச்சூழலில், கபடிக்கு முறையாக பயிற்சி அளிக்க, எஸ்.டி.ஏ.டி., சார்பில் 'ஸ்டார் அகாடமி' கோவை நேரு ஸ்டேடியத்தில் அமைக்கப்படவுள்ளது வீரர்களிடம் மேலும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
40 பேருக்கு பயிற்சி!
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,'நேரு ஸ்டேடியத்தில் கபடியை முறையாக கற்றுத்தர ஸ்டார் அகாடமி பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
இதில், 20 மாணவர்கள், 20 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு மாதத்தில், 25 நாட்களுக்கு தொடர் பயிற்சி வழங்கப்படும்.
சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், சீருடை வழங்கப்படும். மாணவ, மாணவியர் தேர்வு போட்டியானது வரும், 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இம்மையத்தால் நிறைய வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும். மே 1 முதல் இம்மையத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
பயிற்சியாளர் தேர்வு
ஸ்டார் அகாடமியில் பயிற்சி வழங்கிட, 50 வயதுக்குட்பட்ட கபடி பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். பயிற்றுனர் பணிக்கு நேரு ஸ்டேடியத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். வரும், 20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். நேர்காணலானது வரும், 24 அல்லது, 25ம் தேதி நடைபெறும். தேர்வுக்குழு தலைவராக மாவட்ட கலெக்டர் செயல்படுவார்.