/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.ம.க., இளைஞரணி தலைவரிடம் கோவை போலீசார் விசாரணை
/
இ.ம.க., இளைஞரணி தலைவரிடம் கோவை போலீசார் விசாரணை
ADDED : நவ 11, 2024 04:53 AM

கோவை : நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுவித்ததாக, இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரை போலீசார், ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
ஈஷா யோகா மையம் குறித்து அவதுாறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த, 27ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். மேலும், அர்ஜுன் சம்பத் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் ஆசிரியர் கோபாலின் நாக்கை அறுத்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஜலில், 74 என்பவர் கடந்த 28ம் தேதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ஓம்கார் பாலாஜி,30 மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
கோவை கெம்பட்டி காலனியில் வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
அங்கு இரவு முழுவதும் வைத்து விசாரணை நடத்தி, நேற்று காலை விடுவித்தனர்.
இதற்கிடையே போலீசாரை கண்டித்து தமிழகம் முழுவதும், இந்து மக்கள் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். ஓம்கார் பாலாஜியை போலீசார் விடுவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.