sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விண்வெளி ஆராய்ச்சி மைய திட்டத்துக்கு 'இஸ்ரோ'வின் செயற்கைக்கோள் இணைப்பு உதவும் கோவை விஞ்ஞானி பிரபு பெருமிதம்

/

விண்வெளி ஆராய்ச்சி மைய திட்டத்துக்கு 'இஸ்ரோ'வின் செயற்கைக்கோள் இணைப்பு உதவும் கோவை விஞ்ஞானி பிரபு பெருமிதம்

விண்வெளி ஆராய்ச்சி மைய திட்டத்துக்கு 'இஸ்ரோ'வின் செயற்கைக்கோள் இணைப்பு உதவும் கோவை விஞ்ஞானி பிரபு பெருமிதம்

விண்வெளி ஆராய்ச்சி மைய திட்டத்துக்கு 'இஸ்ரோ'வின் செயற்கைக்கோள் இணைப்பு உதவும் கோவை விஞ்ஞானி பிரபு பெருமிதம்


ADDED : ஜன 22, 2025 01:53 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:''கனவு திட்டமான விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு, இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு உதவியாக இருக்கும்,'' என, இஸ்ரோ குழுவில் இடம்பெற்ற கோவை விஞ்ஞானி பிரபு கூறினார்.

இஸ்ரோ, சமீபத்தில் விண்வெளியில், இரு செயற்கைக்கோள்களை இணைத்து, வரலாற்று சாதனையை மேற்கொண்டது. இந்த இணைப்பு செயல்முறையை வெற்றிகரமாக செய்த, நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனை திட்டத்தை, மேற்கொண்ட குழுவில் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி பிரபு, 40, வும் ஒருவர்.

கோவை மணியக்காரம்பாளையத்தை சேர்ந்த இவர், இத்திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது தந்தை சின்னராஜ், தாயார் குமுதம், மனைவி நவோதயா. குழந்தை மகிழினி. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவர், பள்ளிப்படிப்பை கோவை சங்கனுார் எல்.சி., மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் முடித்து விட்டு, சென்னை தாம்பரம் சேலையூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில், பி.இ., இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் படிப்பை படித்தார்.

அதன்பின், சென்னை எம்.ஐ.டி.,யில் எம்.இ., ஏவியானிக்ஸ் படிப்பை முடித்தார். தொடர்ந்து இஸ்ரோவில், 2011ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்த டாக்கிங் சாதனை, எந்தளவுக்கு எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கும்?

எதிர்காலத்தில் நம் சொந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, இஸ்ரோ அமைக்க திட்டமிட்டுள்ளது. அதுதான் முக்கியமான ஒன்று. அதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சந்திரயானின் அடுத்த கட்டமான, நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் திட்டத்துக்கு இது உதவும். இது நீண்ட காலத்திட்டம். இந்த இணைப்பு திட்டம், அனைத்துக்கும் ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கும்.

இதில் உங்கள் பங்கு என்ன?

இது, முற்றிலும் கூட்டு முயற்சி. பல பேர் இரவு, பகல் பாராமல் பணி செய்து நிகழ்த்தியது. தனிநபரின் சாதனை அல்ல. பணி இயக்குநர், திட்ட இயக்குநர், அவர்களுக்கு கீழ், பல துணை இயக்குனர்கள் இருப்பர். நான் இத்திட்டத்தின், செயற்கைக்கோள் இயக்கவியல் எனும், 'பிளைட் டயனமிக்ஸ்' பிரிவுக்கான துணை இயக்குனர்.

செயற்கைக்கோள்கள் பிரிந்தபின், அவற்றை குறிப்பிட்ட துாரத்துக்கு கொண்டு வந்து, அவை தானியங்கி முறைக்கு மாறும் வரை, நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

ககன்யான் திட்டத்துக்கு இச்சாதனை எந்தளவுக்கு உதவிகரமாக இருக்கும்?

இந்திய விண்வெளி வீரர்களை அழைத்து சென்று, பூமியை சுற்றி வந்தபின் மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான், ககன்யானின் முக்கிய நோக்கம். அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில், விண்வெளியில் அமைக்கப்படும் ஆராய்ச்சி நிலையத்துக்கு விண்வெளி வீரராக இருந்தாலும், பொருட்களாக இருந்தாலும் விண்வெளி பரிமாற்றம் செய்ய, டாக்கிங் தொழில்நுட்பமும் அதை செயல்படுத்தும் முயற்சிகளில், கற்றுக்கொண்ட அனுபவமும் எங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

இந்த சாதனையில் முக்கியமான நிகழ்வு என எதை கூறுவீர்கள்?

சந்திரயான் நிலவில் இறங்கிய தருணம் போல, முன்னோக்கி செல்லும் பாதை மிகவும் முக்கியம். அனைத்து அமைப்புகளும், சரியாக பணி செய்வது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் அவை சரியாக பணி செய்ய வேண்டியதும் அவசியம்.

தனித்தனியாக அவை செயல்படுவது ஒரு பகுதி என்றால், அனைத்து செயல்பாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் ஒருங்கிணைந்து, துல்லியமாக செயல்படுவது மிக அவசியம். அவ்வாறு அவை செயல்பட்ட தருணமே, மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும். அது தான் இந்த நிகழ்வில், சவாலான விஷயமாக இருந்தது.

இந்த சாதனை நிகழ்வில் நீங்களும் இடம் பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தியாவுக்கே பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். அதில் நானும் இடம் பெற்றேன் என்பதை நினைக்கும் போது, விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதுபோன்ற எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள், வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை உணர மட்டுமே முடியும்; அளக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us