/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டில்லி சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாணவி பங்கேற்க அழைப்பு
/
டில்லி சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாணவி பங்கேற்க அழைப்பு
டில்லி சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாணவி பங்கேற்க அழைப்பு
டில்லி சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாணவி பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 11, 2025 02:26 AM

கோவை:சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவை மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமரன். இவரது மகள் ப்ரிஷா, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில், பி.டெக்., பயோடெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இளைஞர்கள் புதுமையான யோசனைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கும், மத்திய அரசின் ' விக்ஸித் பாரத்' நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் ஆர்வம் காட்டினார்.
முதற்கட்டமாக, ஆன்லைனில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்ற, 30 லட்சம் பேரிலும், இரண்டாவது கட்டமாக, 9,000ம் பேர் பங்கேற்ற கட்டுரை போட்டியிலும் தேர்வானார்.
சென்னை யில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற, 100 பேரில், புதுமையான யோசனை தெரிவித்து, டில்லியில் ' விக்ஸித் பாரத்' நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி முன்னிலையில் பேச தேர்வு செய்யப்பட்ட, 20 பேரில் ஒருவரான இவர், வேளாண் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து பேசி, அரங்கத்தை வியக்க வைத்தார்.
இதன் பலனாக, சுதந்திர தினத்தன்று, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் 'அட் ஹோம்' ரிஷப்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜ னாதிபதி மாளிகையில் இருந்து அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ப்ரிஷா கூறுகையில், ''பிரதமர் மோடி முன்னிலையில் பேசியது மறக்க முடியாதது. தற்போது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
' ' தென்மாநில அளவில் நான் பங்கேற்க உள்ளதை நினைக்கும்போது, பூரிப்பாக உள்ளது,'' என்றார்.