/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
/
கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
ADDED : பிப் 11, 2026 09:40 AM

பொள்ளாச்சி: 'கல்வி உதவித்தொகை பாலின பாகுபாடின்றி வழங்க வேண்டும்,' என, கோவை மண்டல கட்டுமான தொழிலளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்கம், தியாகி என்.ஜி.ஆர். - எச்.எம்.எஸ். பொது தொழிலாளர் சங்கத்தின், பொள்ளாச்சி நகர பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
நகர தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். செயலாளர் கமல்ரவி முன்னிலை வகித்தார்.
சங்க தலைவர் ராஜாமணி, புதிதாக நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார்.சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன், நலவாரியத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். சங்க நிர்வாகிகள், பாலகுருசாமி, யேசுமேரி, கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.
பொள்ளாச்சி நகர கிளை தலைவர் திருமலைசாமி, செயல் தலைவராக குமார், செயலாளராக கமல்ரவி என்கிற ரவீந்திரன், பொருளாளராக செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும், 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகை பாலின பாகுபாடின்றி வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கேற்ப நலவாரிய நலத்திட்டங்கள் உயர்த்தி வழங்க வேண்டும். 12ம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

