/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் 253 சதவீதம் வளர்ச்சி
/
கோவையின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் 253 சதவீதம் வளர்ச்சி
கோவையின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் 253 சதவீதம் வளர்ச்சி
கோவையின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் 253 சதவீதம் வளர்ச்சி
ADDED : செப் 30, 2025 10:52 PM
ஜி. எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட 2017-18ம் நிதியாண்டில், கோவை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரகத்தின் வரி வருவாய் ரூ.1105 கோடியாக இருந்தது. இது, 2018-19ம் நிதியாண்டில் ரூ.1,799 கோடியாக உயர்ந்தது. தொடர்ந்து அதிக வளர்ச்சி பெற்ற வரி வருவாய் விகிதம், 2022-23ம் நிதியாண்டில் ரூ.3003 கோடியை எட்டியது.
அடுத்த நிதியாண்டான 2023-24ல் 3,390 கோடி ரூபாயை எட்டியது. ஒவ்வோராண்டும் இலக்கைத் தாண்டி, முன்பில்லாத அளவுக்கு சாதனை வருவாயை ஈட்டியது கோவை ஆணையரகம்.
ஆண்டு தோறும் சராசரியாக 12 முதல் 16 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2024-2025ம் நிதியாண்டில் சாதனை அளவாக ரூ. 3,906 கோடி எட்டப்பட்டது.
ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட 2017ம் ஆண்டு வருவாயோடு ஒப்பிடுகையில் இது 253 சதவீத உயர்வாகும். தமிழகத்தின் மற்றெந்த நகரங்களை விட ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நகராக கோவை உள்ளது.
ஜி.எஸ்.டி., பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் 200 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. தற்போது கோவை ஜி.எஸ்.டி., ஆணையரக வரம்புக்குள் ஜி.எஸ்.டி., பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 82,000 ஆகும். இது, 2017-2018ம் நிதியாண்டில், 26 ஆயிரத்து 744 ஆக இருந்தது.
மாநில ஜி.எஸ்.டி., துறையைப்பொறுத்தவரை, கோவை மண்டலத்தில், சுமார் 77 ஆயிரம் வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர்.
மத்திய ஜி.எஸ்.டி., வரி வருவாயைப் பொறுத்தவரை கோவையில் 6,000 வரி செலுத்துநர்களிடம் இருந்து 90 சதவீத வருவாய் பெறப்படுகிறது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் கோவையின் ஜி.எஸ்.டி., வரி வருவாயில் முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகின்றன.