/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் 'தொண்டையில்' நீர் வார்த்த பில்லுார் இனி கோடையில் இருக்காது கவலை
/
கோவையின் 'தொண்டையில்' நீர் வார்த்த பில்லுார் இனி கோடையில் இருக்காது கவலை
கோவையின் 'தொண்டையில்' நீர் வார்த்த பில்லுார் இனி கோடையில் இருக்காது கவலை
கோவையின் 'தொண்டையில்' நீர் வார்த்த பில்லுார் இனி கோடையில் இருக்காது கவலை
ADDED : பிப் 15, 2024 06:43 AM
கோவை : பில்லுார்-3 குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் வாயிலாக, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க முடியும்.
கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட நீராதாரங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
இந்நிலையில், வரும், 2048ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, நபருக்கு தினமும், 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் பொருட்டு, பவானி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.779.86 கோடியில், பில்லுார்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூ.134 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் மருதுாருக்கு, குடிநீர் 'பம்பிங்' செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள்புரத்தில் ரூ.104.90 கோடியில் அமைக்கப்பட்ட, 17.8 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது.
அங்கு, 900 மீட்டர் துார சுரங்கம் வழியாக, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்துவந்த நிலையில் ஒரு வழியாக, இரு தினங்களுக்கு முன் திட்டமும் துவக்கிவைக்கப்பட்டது.
சோதனைக்கு பிறகு, சில இடங்களில் குழாயில் சேறு அடைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை நீக்கும் பணி முடிந்தால், கோவைக்கு இனி குடிநீர் பஞ்சம் இருக்காது என்கின்றனர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்.

