/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயந்திரம் வாங்க ரூ. 50 கோடி மானியம் நெசவாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு

ADDED : டிச 19, 2025 05:03 AM
கோவை: விசைத்தறி நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு, தமிழக அரசு ரூ.50 கோடி மானியமாக நடப்பாண்டு வழங்குகிறது.
இதை நெசவாளர்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை:
விசைத்தறிகளை நவீன தொழில் நுட்பத்தின் கீழ் கொண்டு வருவதற்காக விசைத்தறி நவீனமயமாக்குதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நெசவாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலான பழைய சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்திவரும் நெசவாளர்கள், சாதாரண தறிகளுடன் நாடா இல்லாத ரேபியர் கிட்டுகளை பொருத்திக்கொள்ளலாம். அல்லது புதிய ரேபியர் தறிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
நெசவு தொழில் முனைவோர் இணைந்து பொது வசதி மையமும் நிறுவலாம். வார்ப்பிங் மற்றும் சைசிங் ஆலைகள், பரிசோதனை மையங்களை நிறுவலாம்.
நெசவு இயந்திர மாதிரிகள் உற்பத்தி மையம், வடிவமைப்பு மையம் அமைக்கலாம். அதற்கான உதவி பெற https://tnhandlooms.tn.gov.in/pms/Auth என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.