/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 29, 2025 12:44 AM

கோவை; சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைத்தல், அக்., 6 ம் தேதி முதல், ஒரு வாரத்துக்கு விபத்தில்லா கோவை திட்டம், விழிப்புணர்வு 'ரன் அண்ட் வாக்' ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்நிலையில், அனைத்து தரப்பையும் விழிப்புணர்வு சென்றடைய அனைத்து அரசு துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அனைவரும் உறுதிமொழி எடுத்தல், விபத்தில்லா கோவை வாரம் அனுசரித்தல், அதுகுறித்து துாய்மை வாகனங்கள் வாயிலாக அறிவித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அக்., 2 நடக்கும் கிராம சபை கூட்டத்தில் இது குறித்து அறிவித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சாலை பாதுகாப்பு குறித்த தகவல்களை அறிவிக்க வேண்டும். விபத்து ஏற்படும் வகையில் உள்ள குழிகள், வேகத்தடைகள், ரோட்டின் ஓரங்களை சரிசெய்ய வேண்டும்.
விபத்து பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும். அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அந்தந்த துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.