தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்


ADDED : செப் 24, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் நகராட்சி இணைந்து விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ஷீலாபானு தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பெரியசாமி வரவேற்றார்.

பட்டிமன்றத்தை துவங்கி வைத்து நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசியதாவது:

கல்லுாரி மாணவர்கள் நாட்டுநலப்பணி திட்டத்தின் வாயிலாக, சமூக சேவை செய்ய வேண்டும். குப்பையை நான்கு பிரிவுகளாக பிரித்து வழங்குவதில், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

குறிப்பாக எஸ்டேட் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், திறந்தவெளியில் குப்பை கழிவுகள் வீசுவதால் வன விலங்குகள் அந்தப்பகுதியில் அதிக அளவில் நடமாடுகின்றன.

இது போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

தொடர்ந்து, குப்பையை பிரித்துக்கொடுப்பதில் உள்ள சிரமங்களுக்கான காரணம், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமையா அல்லது பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாத பிடிவாதமா, என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரூபா, உமாமகேஸ்வரி, சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us