/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தின அணிவகுப்பு: கல்லுாரி மாணவர் பங்கேற்பு
/
குடியரசு தின அணிவகுப்பு: கல்லுாரி மாணவர் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பு: கல்லுாரி மாணவர் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பு: கல்லுாரி மாணவர் பங்கேற்பு
ADDED : அக் 30, 2025 11:03 PM

வால்பாறை:  புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க, வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டுநலப்பணி திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதில் இடம் பெற்றுள்ள கல்லுாரி மாணவர் கரன்ராஜ் (பி.காம். இரண்டாமாண்டு) புதுடில்லியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், வரும் டிசம்பர் மாதம், 9ம் தேதி முதல், 19ம் தேதி வரை ஹிமாசல் பிரசேதத்தில் குடியரசு தின விழாவிற்கு முந்தைய பயிற்சிக்கு செல்ல தேர்வாகியுள்ளார். குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள செல்லும், மாணவருக்கு கல்லுாரி முதல்வர் ஜோதிமணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்து தெரிவித்தர்.

