தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலர் அப்பளங்கள் ஓப்பனாக விற்பனை

 கலர் அப்பளங்கள் ஓப்பனாக விற்பனை

 கலர் அப்பளங்கள் ஓப்பனாக விற்பனை


ADDED : ஜூலை 23, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தடை செய்யப்பட்ட பிறகும் கலர் அப்பளம் டவுன்ஹால்,தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு மளிகை கடைகளில், விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் செய்கின்றனர்.

உளுந்து, அரிசிமாவில் தயாரிக்கப்படும் அப்பளங்களில் அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிக வண்ணங்கள் சேர்க்கப்படுவது தெரிந்தது.

தொடர்ந்து சாப்பிட்டால் ஒவ்வாமை, செரிமான கோளாறு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதில் சேர்க்கப்படும் நச்சு ரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்கும் அளவுக்கு ஆபத்தானவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அவற்றை விற்கவும், தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் டவுன்ஹால்,தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் நகரின் பல்வேறு மளிகை கடைகளில், கலர் அப்பள விற்பனை ஜோராக நடக்கிறது. யார் அளிக்கும் தைரியமோ தெரியவில்லை, தடைக்கு பிறகும் கடைகளுக்கு முன்பு மூட்டைகளில் விற்கின்றனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''கலர் அப்பளங்கள் வாங்க வேண்டாமென கூறி வருகிறோம். விற்கவும் தடை உள்ளது.

சந்தை கூடுமிடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். இதை மீறி விற்றால், 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண் மற்றும் unavupukar@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம்,'' என்றார்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கெல்லாம் விற்கப்படுகின்றன என்பது எங்களுக்கு தெரியும்போது, கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் போனதன் மர்மம்தான் புரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள்!

நாம் சாப்பிடும் கலர் அப்பளத்தில்துணிக்கு போடும் செயற்கை நிறமி!


வியாபாரி ஒருவர் கூறுகையில், 'சேலத்தில் கலர் அப்பளம் தயாரிக்கவே 250-300 பேக்டரிகள் உள்ளன. இங்கிருந்து தான், தமிழகம் முழுக்க, அப்பளம் சப்ளை செய்யப்படுகிறது. கோவையில் ஒரு மாதத்திற்கு 100 டன் கலர் அப்பளம் விற்கப்படுகிறது. இதில் 40 சதவீதம் வரை மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவில், இயற்கை நிறமிகள் சேர்த்து தயாரிக்கப்படுபவை. மீதமுள்ள 60 சதவீத அப்பளங்களில், 10-20 சதவீதம் உணவுக்கான நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. மற்றவை, துணிக்கு போடும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டவை. இந்த அப்பளங்கள், வட மாநிலங்களில் இருந்து மிக குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us