/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரி சார்பில் 'காம்பிஸ் எக்ஸ்போ'
/
ரத்தினம் கல்லுாரி சார்பில் 'காம்பிஸ் எக்ஸ்போ'
ADDED : ஆக 09, 2024 10:31 PM

கோவை:ரத்தினம் கலை அறவியல் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கு, 'காம்பிஸ் எக்ஸ்போ 2024' என்ற கண்காட்சி நடந்தது.
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நேற்று நடந்த கண்காட்சியை தணிக்கையாளர் சிவசங்கர் திருமூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, ரத்தினம் கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில், 10 கல்லுாரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்களின் மாதிரிகளை காட்சிப்படுத்தினார்கள். சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி முதலிடம், டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.