/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர் கூட்டத்துக்கு மனு விபரங்களுடன் வரணும்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் உத்தரவு
/
குறைதீர் கூட்டத்துக்கு மனு விபரங்களுடன் வரணும்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் உத்தரவு
குறைதீர் கூட்டத்துக்கு மனு விபரங்களுடன் வரணும்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் உத்தரவு
குறைதீர் கூட்டத்துக்கு மனு விபரங்களுடன் வரணும்! அதிகாரிகளுக்கு சப் - கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 01, 2024 11:25 PM

பொள்ளாச்சி;'விவசாயிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும்,' என அதிகாரிகளுக்கு, சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அத்துமீறி தடுப்பணை
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., திட்டத்தை நம்பியே, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர். பி.ஏ.பி., திட்டத்தில் நீர் ஆதாரமாக வால்பாறை பகுதியே உள்ளது. இந்நிலையில், அங்கு, 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேயிலை தோட்டங்களில் தடுப்பணைகள் கட்டி இருக்கின்றனர். 50 மில்லியன் கனஅடி நீருக்கு மேல் தடுப்பணையில் சேமிப்பதால், இங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் காயர் பித்துக்காக பி.ஏ.பி., தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதை தட்டிக்கேட்டால் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய வீட்டுமனைகள் அமைக்கும் போது, அரணி கால்வாய்கள் பராமரிப்பின்றி விடப்படுகின்றன. இதனால், நீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
பாசன நீரில் தில்லுமுல்லு
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதியில் பாசன நீர் வினியோகிக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன சங்க பிரதிநிதிகள் கிளை கால்வாயில் பாசனம் பெறும் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தவில்லை.
சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாசன நீரை, செல்வாக்கு படைந்த சில விவசாயிகளும், பாசன சங்க நிர்வாகிகளும் முறைகேடாக எடுத்து பயன்படுத்துகின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூலனுார் ஊராட்சியில், அனுமதியின்றி குழாய் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காததால் தற்போது இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஜமீன் ஊத்துக்குளி, மீன்கரை ரோடு குஞ்சிபாளையம் இணைப்புச்சாலையில் உள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை கைவிட வேண்டும்.ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., திட்டத்தில் பாசனத்துக்கு நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கண்காணிப்பு பணிகளை சப் - கலெக்டர் கண்காணிப்பு செய்து வருவதால், தற்போது, பொள்ளாச்சி கோட்டத்தில், தண்ணீர் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, பேசினர்.

