/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருகிறது 'தமிழ் புதல்வன்' திட்டம் கோவை கலெக்டர் தகவல்
/
வருகிறது 'தமிழ் புதல்வன்' திட்டம் கோவை கலெக்டர் தகவல்
வருகிறது 'தமிழ் புதல்வன்' திட்டம் கோவை கலெக்டர் தகவல்
வருகிறது 'தமிழ் புதல்வன்' திட்டம் கோவை கலெக்டர் தகவல்
ADDED : மார் 05, 2024 01:15 AM

கோவை:சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் புதிய விதமாக பாடங்கள் நடத்துவதற்கு, தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெற்றோர், ஆசிரியர் பங்களிப்புடன் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு திட்டங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், பணிகள் செய்யப்படுகின்றன.
அரசு பள்ளியில் படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவியருக்கு மாதந்தோறும், ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க, தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் அனைவரும் உயர் கல்வி கற்று, வேலைவாய்ப்பு பெறுவதற்கு அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
விழாவில், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள், தலைமை ஆசிரியர் (பொ) லதா, எஸ்.எஸ்.குளம் வட்டார கல்வி அலுவலர்கள் தன்னாசி, ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

