/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்யூ. நுாற்றாண்டு விழா நிறைவு
/
கம்யூ. நுாற்றாண்டு விழா நிறைவு
ADDED : டிச 27, 2025 05:17 AM

கோவை: கம்யூனிஸ்ட் கட்சி நுாற்றாண்டு நிறைவு விழா மற்றும் ஆர்.நல்லகண்ணு, 101 வது பிறந்தநாள் விழா, கோவை மாவட்ட இ.கம்யூ. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்து பேசுகையில், ''கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவில் விடுதலைக்கு முன்பு தோன்றிய கட்சியாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மூன்று முறை தடை செய்யப்பட்டது. தலைவர்கள் பலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். இதை எல்லாம் கடந்து இந்த கட்சி இன்றும் நிலை பெற்றுள்ளது. கட்சியின் நுாற்றாண்டு நிறைவு நாளில் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளைஞர்கள் மூத்த தலைவர்களின் வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும்'' என்றார்.
மூத்த தலைவர்கள் அமீர்கான் 36 ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் கே.டி.கே.தங்கமணி 24 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

