ADDED : டிச 13, 2024 08:31 PM
நெகமம்;நெகமம், காட்டம்பட்டி ஊராட்சியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வந்தது. இதில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 7.17 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாக கட்டடம், 9.08 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டடம், 17.43 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, 4 லட்சம் மதிப்பீட்டில் தாசநாயக்கன்பாளையம் கிராமத்தில் எரிமேடை அமைக்கப்பட்டது.
சி.எஸ்.ஆர்., நிதியில், 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, 27.42 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம், 35.62 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட தொட்டி, 2.50 லட்சம் மதிப்பீட்டில் காட்டம்பட்டி ஊராட்சியின் பல்வேறு பகுதியில் தெரு விளக்குகள் அமைத்தல், 26.85 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் வாயிலாக, ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு செய்யப்பட்டது.
நிறைவடைந்த இந்த பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, காட்டம்பட்டி ஊராட்சித் தலைவர் மணி, துணை தலைவர் கிரிகதிர்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.