/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு மாதத்துக்கு உள்ளே வரக்கூடாது; 29 ரவுடிகளுக்கு கமிஷனர் உத்தரவு
/
ஆறு மாதத்துக்கு உள்ளே வரக்கூடாது; 29 ரவுடிகளுக்கு கமிஷனர் உத்தரவு
ஆறு மாதத்துக்கு உள்ளே வரக்கூடாது; 29 ரவுடிகளுக்கு கமிஷனர் உத்தரவு
ஆறு மாதத்துக்கு உள்ளே வரக்கூடாது; 29 ரவுடிகளுக்கு கமிஷனர் உத்தரவு
UPDATED : ஏப் 24, 2025 11:55 PM
ADDED : ஏப் 24, 2025 11:29 PM

கோவை, ; கோவை மாநகர பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து, சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, பொது மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த, 110 ரவுடிகள் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது, இதுபோன்று, இருக்கும் நபர்களை கண்டறிந்து பட்டியல் சமர்ப்பிக்க, போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்படி, தற்போது மேலும், 29 ரவுடிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆறு மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டார். மீறி மாநகருக்குள் வரும் ரவுடிகள் மீது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.