ADDED : செப் 07, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
மதுக்கரை: மதுக்கரை நகராட்சியிலுள்ள, 27 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பையை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் கொட்டாமல், தூய்மை பணியாளரிடம் ஈர கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.
மதுக்கரை நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் சத்யா அறிவித்துள்ளார்.
