/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுதேசி பொருட்கள் பயன்படுத்த உறுதி
/
சுதேசி பொருட்கள் பயன்படுத்த உறுதி
ADDED : செப் 07, 2025 09:26 PM

சூலுார்; சூலுாரில் நடந்த வ.உ.சி., பிறந்த நாள் விழாவில், சுதேசி பொருட்களை வாங்கி, பயன்படுத்த உறுதி ஏற்கப்பட்டது.
சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் இந்து முன்னணி சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட்டில் சுதந்திர போராட்ட தியாகியும், சுதேசி கப்பல் இயக்கி, தேசப்பற்றை மக்களிடையே விதைத்தவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவ படத்துக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வ.உ.சி.,யின் தியாகங்கள், சுதேசி சிந்தனை குறித்து நிர்வாகிகள் பேசினர். ஆங்கிலேய அடக்குமுறை காலத்தில் சொந்தமாக கப்பல் வாங்கி இயக்கியது குறித்து விவரிக்கப்பட்டது. தொடர்ந்து, 'சுதேசி பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம்' என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பா.ஜ., இ.மு., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.